Note: For those of you who can't read the tamil script.
Download and follow instructions available here. I know I could have written this in Tanglish but that wouldn't have been fair to both me and Jayamohan from whose site I copied all of this stuff. Actually this isn't fair to him either way because this way he does all the writing and I just copy stuff from his site.
எழுதுறதுக்கு முன்னாடி disclaimer போட்டுறது better னு நெனைக்கிறேன். அடுத்துவர quotes லாம் என் படைப்பு இல்ல. ஏற்கனவே எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியது.புரட்சி தலைவர் m.g.r பத்தி அவர் ezhudhina article la இருந்து excerpts.
"எம்ஜியாரின் பேச்சு வேறு எங்களுக்கு புரிவதில்லை. தீப்பொறி ஆறுமுகம் மேடையில் சொல்லும் நகைச்சுவை ஒன்று உண்டு. ஆசிரியர்கள் போராட்டம் நடந்தபோது அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த எம்.ஜி.ஆர் சொன்னாராம் ”உங்களுக்கெல்லாம் பைப்பு இருக்கு பம்பு இல்லை”. ஆசிரியர்கள் திக்பிரமை அடித்துபோய் பேச்சுவார்த்தை முறிந்தே போயிற்று. தலைவர் சொன்னது படிப்பு இருக்கிறது பண்பு இல்லை என்று. குலசேகரத்தில் பல வசனங்களை நாங்கள் கேட்டு அடைந்த கதையும், பெற்ற நெகிழ்ச்சிகளுமே வேறு. ” அம்மா, உங்க மகன் எப்பியாவது பயிச்சு பெய்யவனாய் அந்த பாயிகளை பாய் வாங்குவேன்…”. நம்பியார் ஜமக்காள வியாபாரியாதலினால்தான் பாய்வாங்குவதை தடுக்க முயல்கிறாரா?"
அதேபோல காதல் வசனங்கள். ”கமலா, நீ என்னை தப்பா புழிஞ்சுக்கிட்டே…[அடிப்பாவி] என்னை கயமை அய்க்குது. எங்கம்மாவுக்கு நான் ஒரு சத்தியம் செஞ்சு குதித்திருக்கேன்….” பொன்மொழிகளும் சிக்கலானவை ”தேய்ஞ்சு செஞ்சா தவழு. தேயாம செஞ்சா தப்பு”. தப்புக்கு தவழ வேண்டாம், பெஞ்சுமேல் ஏறினால் போதுமா? உணர்ச்சிகரமான காட்சிகளில் நாங்கள் வெடித்துச் சிரிக்கிறோமென்பதனால் எங்களூருக்கு எம்ஜிஆர் படங்களையே கொடுக்கமாட்டோமென்று சொல்லப்பட்டது.”…அம்மா அப்பி சொல்லாதீங்கம்மா. தை செஞ்சு அப்பி சொல்லாதீங்க…உங்க மகன் ஒருநாளும் அப்பி செய்யமாட்டான்” எங்களூரில் அப்பி என்றால் சின்னப்பிள்ளை கொல்லைக்குபோவது என்றொரு பொருள் உண்டு."
திரும்ப ஒரு வாட்டி அபீட் clause include பண்ணிடறேன் ,
மேலே கூறப்பட்ட கருத்துக்கள் எம்முடயதல்ல !
இணையதளத்தில் தங்களை போல் வெட்டியாக சுற்றிய பொழுது கண்ணில் பட்டது .அதனால என் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிறாதிங்க!
article ல இத விட மோசமா லம் நிறைய இருந்துது அதயலாம் censor பண்ணி include பண்ணிருக்கேன்.
No comments:
Post a Comment